Home / Photos
புற்றுநோயை எதிர்த்து போராடும் ஸ்பைருலினா பற்றிய சில ஆச்சர்யமான தகவல்கள்..!!
ஆயுளை அதிகரிக்கக்கூடிய ஸ்பைருலினா பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/10
Share
கடற்பாசியின் ஒரு வகையான நீல-பச்சை பாசி (Blue green algae) வகையை சேர்ந்த ஸ்பைருலினா (Spirulina) ஈரப்பதத்தில் வளரக் கூடியது. உடலில் ஏற்படும் வைட்டமின் குறைபாட்டை போக்கக்கூடியது.
2/10
Share
இதில் புரதம் மற்றும் விட்டமின் பி, சி, டி, ஈ போன்ற விட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. முக்கியமக குளோரோஃபில் அதிகம் காணப்படுகிறது.
3/10
Share
இத்தனை சத்துக்கள் நிறைந்த இந்த ஸ்பைருலினாவை ஸ்மூத்தி மற்றும் பழச்சாறுகளில் கலந்து சாப்பிடுவதன் மூலம் இதன் சத்துக்களை முழுமையாக பெற முடியும். இது ஜீரண என்சைம்களை கொண்டுள்ளதால் அஜீரண பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
4/10
Share
பொதுவாக ஒரு நாளைக்கு 500 மி.கி அளவு எடுத்து கொள்ளலாம். மேலும், இதை சாப்பிடும் போது நிறைய தண்ணீர் குடிக்கவும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் தலைசுற்றல் ஏற்படலாம்.
5/10
Share
அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் காணலாம். இவை புற்றுநோய் மற்றும் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
6/10
Share
இதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் குளோரோஃபில் இளமையான செல்களை தக்க வைத்து முதுமையை தள்ளி போடுகிறது. ரத்த சோகையால பாதிக்கப்பட்டவர்கள் ஸ்பைருலினாவை சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது.
7/10
Share
ஸ்பைருலினா உடலில் உள்ள கொழுப்பை வேகமாக எரிப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவு என்று சொல்லலாம். இவர்கள் ஸ்பைருலினாவை காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் எடுக்க வேண்டும்.
8/10
Share
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் உணவு சாப்பிட்ட பின் ஸ்பைருலினாவை எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி போன்றவை வராமல் காக்கவும், வந்த பின் குணப்படுத்தவும் ஸ்பைருலினா மருந்தாக பயன்படுகிறது.
9/10
Share
கர்ப்ப காலத்தில் ஸ்பைருலினாவை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது. எனவே ஸ்பைருலினாவை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.


Click it and Unblock the Notifications