உலகிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் இவங்க தானாம்.. யாரெல்லாம்? எவ்வளவு? சுவாரசிய லிஸ்ட்!
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் யார் யார்? எந்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினர்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பார்பீ பட நடிகை மார்கோட் ராபி இந்த பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ளார். The Wolf of Wall Street படத்தில் நடிக்க 5 லட்சம் டாலர் வாங்கிய இவர், பார்பீ படத்தில் நடிக்க சுமார் 50 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கி நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.
ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளார். 2001ல் வெளிவந்த The Mummy Returns படத்தில் நடிக்க 5.5 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கிய இவர், Red One படத்தில் நடிக்க சுமார் 50 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கியுள்ளார். ஹாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.
இந்த பட்டியலில் ராபர்ட் டவுனி ஜூனியர் 4ம் இடத்தை பிடித்துள்ளார். 2008ல் வெளிவந்த Iron Man படத்தில் நடிக்க 5 லட்சம் டாலர் சம்பளம் வாங்கிய இவர், Avengers: Endgame படத்தில் நடிக்க சுமார் 75 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த பட்டியலில் ஜானி டெப் 3ம் இடத்தை பிடித்துள்ளார். 2010ல் வெளிவந்த A Nightmare on Elm Street என்ற படத்தில் நடிக்க வாரம் சுமார் 1200 டாலர் சம்பளம் வாங்கி வந்தார். பின்னர், Pirates of the Caribbean படங்களில் நடிக்க சுமார் 90 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொரு பாகத்துக்கும் 90 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் வில் ஸ்மித் 2ம் இடத்தை பிடித்துள்ளார். 1992ல் வெளிவந்த Where the Day Takes You படத்தில் நடிக்க சுமார் 5 லட்சம் டாலர் சம்பமலம் வாங்கிய இவர், MIB 3 படத்தில் நடிக்க சுமார் 100 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இறுதியாக, உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக டாம் குருஸ் உள்ளார். 1983ல் வெளிவந்த Risky Business படத்தில் நடிக்க சுமார் 7 லட்சம் டாலர் சம்பளம் வாங்கிய இவர், Top Gun: Maverick படத்தில் நடிக்க சுமார் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி அதிகம் சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகராக உள்ளார்.


Click it and Unblock the Notifications