அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்.. யாரெல்லாம்? நம்பர் ஒன் யார்?
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அனுஷ்கா ஷெட்டி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் அனுஷ்கா, தற்போது மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து முன்னணி தென்னிந்திய நடிகையாக ஜொலித்து வருகிறார். இவர் படம் ஒன்றில் நடிக்க சுமார் 5-6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. 2017இல் வெளிவந்த சூர்யாவின் 'சிங்கம் 3' படத்திற்கு பின் இவர் தமிழில் ஆளையே காணொம் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் மிக பெரிய ரசிகர்கள் கொண்டுள்ளவர் நடிகை சாய் பல்லவி. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அதிக கவனம் செழுத்தி வரும் இவர், படம் ஒன்றில் நடிக்க சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த அதற்கு பின் நடித்த சமந்தாவின் படங்கள் ஒன்றும் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. மற்றொரு பக்கம் இவர் திருமண பந்தத்திலும் இணைந்துள்ளார். இவரின் மார்க்கெட் கொஞ்சம் குறைந்திருந்தாலும் படம் ஒன்றில் நடிக்க 7 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
எவர்க்ரீன் நடிகை திரிஷாவின் மார்க்கெட் தற்போது மளமளவென உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்கள் த்ரிஷாவின் கால்ஷீட்டுக்காக லைனில் காத்துள்ளனர் என்றே சொல்லலாம். அஜித், விஜய், கமல், சூர்யா என ஸ்டார் நடிகர்களின் படங்கள் த்ரிஷா இல்லாமல் ரிலீஸாவதில்லை. தற்போது இவர், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர், படம் ஒன்றில் நடிக்க சுமார் 10-12 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் நயன்தாரா. தற்போது இவர் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதால் தென்னிந்திய சினிமாவில் இவரின் மார்க்கெட் குறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி இவர், ஹிந்தியில் 12 கோடி ரூபாய் வரையிலும், தென்னிந்திய படங்களில் 9 கோடி ரூபாய் வரையிலும் சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
முதல் இடத்தில் இருந்த நயன்தாராவை பின்னுக்கு தள்ளி நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா முதல் இடத்தை பிடித்துள்ளார். புஷ்பா 1, புஷ்பா 2, அனிமல் என தொடர் வெற்றி படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பலமடங்கு உயர்திக்கொண்டார். ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து ஸ்டார் நடிகையாக ஜொலிஜொலித்து வருகிறார். அந்த வகையில் இவர், படம் ஒன்றில் நடிக்க சுமார் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications