ஓடிடி-யில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தமிழ் படங்கள்.. நம்பர் ஒன் எதுன்னு பாத்தீங்களா?
கொரோனா காலகட்டத்தில் மக்களை அதிகளவு ஈர்த்த ஓடிடி தளம் தற்போது வரை அதன் மவுசு குறையாமல் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் ஓடிடி பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தயாரிப்பாளர்களும், நடிகர்களும் ஓடிடி ட்ரெண்டுக்கு மாறி வருகின்றனர். படம் எந்த தியேட்டரில் ரிலீஸாகிறது என பார்த்த நம் மக்கள் இப்போதெல்லாம் எந்த ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது என்பதை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதேபோல் பெரும்பாலான பெரிய படங்கள் தியேட்டரில் ரிலீஸாவதற்கு முன் ஓடிடியில் விற்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் தயாரிப்பாளர் தனது படத்தின் பாதி லாபத்தை வசூல் செய்து விடுகிறார். அந்த வகையில் ஓடிடி தளத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தமிழ் படம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
குட் பேட் அக்லி: அஜித் நடிப்பில் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுயள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரசிகர்களின் அளப்பறையுடன் தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மொத்தம் 85 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஜெயிலர்'. விமர்சனம் ரீதியாகவும் வசூலிலும் இமாலய வெற்றி பெற்ற இப்படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்களுக்குள் கடும் போட்டி நிலவியதாக கூறுகின்றனர். இறுதியக இப்படத்தை அமேசான் பிரைம் 90 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஜனநாயகன்: விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் கடைசி திரைப்படம் 'ஜனநாயகன்'. அரசியல் காலத்தில் குதித்த விஜய், அரசியலை மையப்படுத்தி ஜனநாயகன் படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 105 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
கோட்: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'கோட்'. இப்படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 108 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
கூலி: ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
தக் லைப்: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தக் லைப்'. மணிரத்னம்-கமல் கூட்டணி என்றாலே செம ஹிட் தான். இதனால் ஓடிடி நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி இருந்ததாக கூறுகின்றனர். இப்படத்தை நெட்பிளிக்ஸ்145 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்த லிஸ்டில் முதல் இடத்தை வேறு எந்த ஸ்டார் நடிகரின் படமும் இடம் பிடிக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாகும். இப்படத்தை அமேசான் பிரைம் 155 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இன்றும் எந்த பெரிய நடிகரின் படமும் பொன்னியின் செல்வனின் சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications