Home / Photos
PHOTOS: இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் எதுன்னு தெரியுமா? சுவாரசிய லிஸ்ட் இதோ!
By Chandru
list of hollywood movies filmed in india. check out the full details here.
1/8
Share
உலகம் முழுவதும் ஹாலிவுட் படங்களுக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அசாத்தியமான மேக்கிங், அசத்தலான ஆக்ஷன் சீக்குவன்ஸ் என பிரமிக்கவைக்கும் படைப்புகளை உருவாக்க ஹாலிவுட் சினிமாவை மிஞ்ச வேறு எந்த சினிமாவும் இல்லை என்றே சொல்லலாம்.
2/8
Share
பிரமாண்டமாக எடுக்கப்படும் பெரும்பாலான ஹாலிவுட் படங்களில் உயர்தரமான தொழில்நுட்பங்கள் அடங்கிய கேமராக்கள் மற்றும் சிஜி தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு படத்தை தயாரிக்க படக்குழுவினர் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு இடங்களுக்கு பயணிப்பது வழக்கம். அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் எந்தெந்த படங்கள் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
3/8
Share
தி டார்ஜிலிங் லிமிடெட்: 2007 ஆம் ஆண்டு வெளியான படம் தி டார்ஜிலிங் லிமிடெட். இப்படம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக உதைப்பூர், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
4/8
Share
தி நெம்சாக்: கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் தி நெம்சாக். இப்படம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது.
5/8
Share
லைப் ஆப் பை: 2012ம் ஆண்டு வெளியான படம் லைப் ஆப் பை. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகர் என பல விருதுகளை இப்படம் குவித்தது.
6/8
Share
தி டார்க் நைட் ரைசஸ்: 2012ம் ஆண்டு வெளியான இப்படம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.
7/8
Share
டெனெட்: 2020ம் ஆண்டு வெளியான படம் டெனெட். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையின் முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
8/8
Share
எக்ஸ்ட்ராக்சன்: 2020ம் ஆண்டு வெளியான படம் எக்ஸ்ட்ராக்சன். இப்படத்தில் வரும் பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகள் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களில் படமாக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications