2025ல் சினிமா ரசிகர்களை ஈர்த்த சர்வதேச திரைப்படங்கள், வெப் சீரிஸ்.. என்னென்ன? எந்த ஓடிடி தளங்களில் காணலாம்?
2025ல் சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்த சர்வதேச திரைப்படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கிரைம், மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த வெப் தொடர் 'Dept. Q'. ஆய்வு பெற்ற புலனாய்வு அதிகாரி ஒருவர், தீர்க்கப்படாத, விடை கிடைக்காத பழைய வழக்குகளை புலனாய்வு செய்து விசாரிக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம். பெரும் வரவேற்பு பெற்ற இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மருத்துவ துறையில் இருக்கும் சிக்கல்களையும், அவசர பிரிவில் பணிபுரியும் மருத்துவரின் போராட்டங்களை கூறும் வெப் தொடர் 'The Pitt'. சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்ற இத்தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி, சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளிவந்த வெப் தொடர் 'Severance'. அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் போராட்டம். டேய்ஸ்ட் காட்சிகள் நிறைந்த இத்தொடரை ஆப்பிள் டிவி தளத்தில் காணலாம்.
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த கட்டிட கலைஞரின் வாழ்க்கை போராட்டங்களை கூறும் கதை 'The Brutalist'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஆக்ஷன், க்ரைம், சமூக அரசியல் பேசும் படம் 'One Battle After Another'. முன்னாள் புரட்சியாளர் ஒருவரின் மகளை காப்பாற்ற ஒன்றுகூடும் புரட்சியாளர்களின் கதை. ஆழமான அரசியலை பேசும் இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Sinners'. ஹாரர் படமாக மட்டுமல்லாமல் இனவெறி தாக்குதல்களை பற்றிய படமாகவும் வெளியானது. இத்தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.
சைக்கலாஜிக்கல் ஹாரர், டார்க் ஃபேண்டஸி திரைப்படம் 'Frankenstein'. புகழ்பெற்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஃபேண்டஸி திரைப்படம். சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கப்பட்ட இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
அனிமேஷன் பிரியர்களுக்காக வெளியான கொரியன் திரைப்படம் 'KPop Demon Hunters'. ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி, ஃபேண்டஸி ஜானரில் வெளிவந்த இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
சைக்கலாஜிக்கல் திரில்லர், கிரைம் ஜெனரல் வெளிவந்த வெப் தொடர் 'Adolescence'. இன்றைய டீன் ஏஜ் இளைஞரின் மனஓட்டத்தை குறித்தான தொடராகும். சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்த இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications