போர் சூழ்ந்த வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்.. எத்தனை பேர்?
போர் சூழ்ந்த வளைகுடா நாடுகளான ஈரான், இஸ்ரேல், ஓமன், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எத்தனை பேர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து வருகிறது. அணு ஆயுதத்தை உருவாக்குவதாக கூறி இரு நாடுகளும் ஈரான் மீது பயங்கர வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் சூழ்ந்த ஈரானில் சுமார் 9000-10,000 இந்தியர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த முக்கிய காரணமே இஸ்ரேல் தான் என கூறப்படுகிறது. இதனால் ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் சுமார் 1 லட்சம் இந்தியர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அதன்படி பஹ்ரைன் நாட்டில் சுமார் 3.3 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் சுமார் 6.9 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் சுமார் 8.4 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் இருக்கும் வளைகுடா நாடுகளில் ஒன்று சௌதி அரேபியா. அந்நாட்டில் சுமார் 24.6 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியாக, இந்தியர்கள் அதிகம் இருக்கும் வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. அந்நாட்டில் சுமார் 35.7 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications