Home / Photos
வழக்கம் போல்.. இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான்.. 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. போட்டோஸ்!
By Chandru
இந்தியா-பாகிஸ்தான் இடையான டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
1/10
Photo Credit: PTI
Share
இந்தியா-பாகிஸ்தான் இடையான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது.
2/10
Photo Credit: PTI
Share
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய ஓப்பனிங் இறங்கிய இஷான் கிஷன் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கதறவிட்டுள்ளார். 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.
3/10
Photo Credit: PTI
Share
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் வந்த வேகத்தில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 175 ரன்கள் என்ற டீசெண்டான ஸ்கோரை எடுத்தது.
4/10
Photo Credit: PTI
Share
பாகிஸ்தான் பௌலர் சயீம் ஆயுப் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடியது.
5/10
Photo Credit: PTI
Share
முதல் ஓவர் பௌலிங் செய்த ஹர்திக் பாண்டியா, 4வது பந்தில் முதல் விக்கெட்டை எடுத்தார். சஹிப்சதா பர்ஹான் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பும்ரா பந்தில் சயிம் ஆயுப் அவுட்டாகி வெளியேறினார்.
6/10
Photo Credit: PTI
Share
ஓப்பனிங் இறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஓவுட்டாகி வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.
7/10
Photo Credit: PTI
Share
அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் 44 ரன்களும், ஷாஹீன் அஃப்ரிடி 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.
8/10
Photo Credit: PTI
Share
விக்கெட் மளமளவென சரிய 18 ஓவர் முடிவில் 114 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் தோற்றது பாகிஸ்தான்.
9/10
Photo Credit: PTI
Share
பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்ஷர படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.


Click it and Unblock the Notifications