Home / Photos
ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.. போட்டோஸ்!
By Chandru
டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
1/10
Photo Credit: PTI
Share
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதிக்கொண்டன. வெற்றி பெரும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் அது ஒரு வாழ்வா? சாவா? போட்டியாக இருந்தது.
2/10
Photo Credit: PTI
Share
டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹாப் மற்றும் ரோஸ்டன் சேஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்படி ஹாப் 32 ரன்களும், சேஸ் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
3/10
Photo Credit: PTI
Share
இந்திய பௌலர்களை கதிகளங்கவைத்த தொடக்க ஆட்டக்காரர்கள் வெளியேறிய பின் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஹெட்மியர் 27 ரன்களும், ரதர்ஃபோர்ட் 14 ரன்களும், ரோவ்மேன் பவல் 34 ரன்களும், ஹோல்டர் 37 ரன்களும் எடுத்தனர்.
4/10
Photo Credit: PTI
Share
இறுதியாக 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடியது.
5/10
Photo Credit: PTI
Share
முதலில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களை திணறடித்தார்.
6/10
Photo Credit: PTI
Share
சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் திணறிப்போயினர். மைத்தனத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
7/10
Photo Credit: PTI
Share
தொடர்ந்து இஷான் கிஷன் 10 ரன்களும், சூர்யகுமார் யதேவ் 18 ரன்களும், திலக் வர்மா 27 ரன்களும், பாண்டியா 17 ரன்களும், சிவம் துபே 8 ரன் என மொத்தம் இந்திய அணி 199 ரன்கள் எடுத்தது.
8/10
Photo Credit: PTI
Share
19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 199 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
9/10
Photo Credit: PTI
Share
இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் அதிரடி பேட்டிங் பெரும் பங்கு வகித்தது.


Click it and Unblock the Notifications