12ம் வகுப்போடு படிப்பை நிறுத்திய திரை பிரபலங்கள்.. யாரெல்லாம்? தமிழ் நடிகர்கள் இருக்காங்களா? லிஸ்ட்!
சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் 12ம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டு தங்களது திரை பயணத்தை தொடங்கிய நடிகர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான் கான், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் 12ம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார். கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே அங்கு இருந்து வெளியேறி சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
இளைஞர்களின் கனவுக்கன்னி பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், பள்ளிக்கு சென்றதே இல்லையாம். பெற்றோர்களின் விவாகரத்து கத்ரீனாவின் கல்வியை பாதித்தது. தற்போது இந்தியளவில் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், 12ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி சினிமாவில் களமிறங்கினார்.
ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்ட ஆலியா பட், 12ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார்.
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், 6ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததால் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தற்போது இந்தியாவின் ஸ்டார் நடிகராக ஜொலித்து வருகிறார்.
6 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன், நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பள்ளி படிப்பை தொடராமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
கார் ரேஸரும், நடிகருமான அஜித், 12ம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டு டிவி விளம்பரங்கள், சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினர்.
நடிகர் விஜய், 12ம் வகுப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கினார். ஆனால் அவருக்கு ஆர்வம் இல்லாததால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.


Click it and Unblock the Notifications