Home / Photos
ஆசிய விளையாட்டு போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி.. போட்டோஸ்!
By Chandru
ஆசிய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
1/8
Photo Credit: PTI
Share
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் அணியும் டி20 தொடரின் இறுதி போட்டியில் மோதியது. அதில், பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
2/8
Photo Credit: PTI
Share
டி20 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி இருவரும் களமிறங்கினர்.
3/8
Photo Credit: PTI
Share
அதிரடியாக ஆடத்தொடங்கிய வைபவ், 9 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேற்றொரு பக்கம் அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா, 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்ந்தார். பின்னர் மூன்றாவதாக களமிறங்கிய சஞ்சு, வெறும் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.
4/8
Photo Credit: PTI
Share
அடுத்தடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 21 ரன்கள், இஷான் கிஷன் 20, ஷிவம் துபே 27 ரன்கள் என ஆட்டமிழந்தனர். ஒவ்வொருவராக ஆட்டமிழக்க திலக் வர்மா, 22 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.
5/8
Photo Credit: PTI
Share
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தானின் திணறத் தொடங்கியது.
6/8
Photo Credit: PTI
Share
ஹசன் நவாஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 51 ரன்களில் 96 ரன்கள் எடுத்தார். இறுதியாக, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது பாகிஸ்தான்.
7/8
Photo Credit: PTI
Share
19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணி தங்கப் பதக்கம் வென்றது.
8/8
Photo Credit: PTI
Share
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications