இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு.. உலகை வியக்கவைத்த கண்டுபிடிப்புகள்! என்னென்ன?
நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக உள்ளது. புதுமைகள் பல கண்டறியப்பட்டு வருகிறது. கால்கடுக்க வரிசையில் நின்று பணப்பரிவர்த்தனை செய்த காலம் போய் இப்பொது ஒரே கிளிக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. எலெட்ரிக் கார், ஸ்மார்ட் போன், புல்லட் ட்ரைன்,மெட்ரோ ட்ரைன், இன்டர்நெட், விண்வெளி பயணம் இப்படியாக தொழில்நுட்பம் வானுயர் வளர்ச்சி கண்டுள்ளது. இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த காலத்து விஞ்ஞானிகளே. அவர்கள் போட்ட விதை தான் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம். அதில் முக்கிய பங்கேற்றியவர் கோவையை சேர்ந்த நம் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு. அந்தவகையில் ஜி.டி.நாயுடுவின் வியக்கவைக்கும் கண்டுபிடிப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மெக்கானிக்கல், எலெட்ரிக்கல், எலெட்ரானிக்ஸ், விவசாயம் என பல துறையில் வல்லவராக இருந்தவர் ஜி.டி.நாயுடு. தொழில்நுட்பத்தை எளிதில் புரிந்துகொண்ட அதில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்துவிடுவார். இப்படி தான், இரண்டாம் உலக போர் சமயத்தில் ஐரோப்பா சென்றுள்ளார். அங்கு பிளேடுகளுக்கு கடும் தட்டுப்பாடு. இந்த சமயத்தில் ஜி.டி.நாயுடு ஒரு பேக்கரிக்குள் செல்கிறார். வாடிக்கையாளருக்கு பிரட் துண்டுகளை கட் செய்து கொடுக்கும் ஒரு இயந்திரத்தை பார்க்கிறார். கிடைத்தது ஐடியா என ஒரு பொம்மையில் உள்ள சின்ன மோட்டாரை கழற்றி அதன் நுனியில் பிளேடை சுற்றவைத்து ஷேவிங் ரேசரை உருவாகிவிடுகிறார். தற்போது நாம் பயன்படுத்தும் ட்ரிம்மரின் முன்னோடி ஜி.டி.நாயுடு தான்.
ஜி.டி.நாயுடு தனது யூஎம்எஸ் தொழிசாலையில் ரேடியோகிராம் கண்டுபிடிக்கிறார். நான்கு ஸ்பீக்கர், நான்கு பேண்ட், 10 ரெக்கார்டுகள் மாற்றிக்கொள்ளும் வசதிகொண்ட ரேடியோகிராமை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ஜி.டி.நாயுடு தான்.
ஐரோப்பாவில் ரேசரை கண்டுபிடித்ததை போல் சிக்காகோவில் பழ ஜூசர் இயந்திரத்தை கண்டுபிடித்தார். பல்கலைக்கழம் ஒன்றில் ஆரஞ்சு பற்றிய ஆராய்ச்சியின் பொது ஜூசர் கண்டுபிடித்துள்ளார்.
1940இல் உருளைக்கிழங்கை தோல் உரிக்கும் கருவியை கண்டுபிடித்தார். பல மணிநேரம் செய்யவேண்டிய அந்த வேலையை இந்த கருவி பயன்படுத்தி சில நிமிடத்தில் செய்துவிடலாம். உருளைக்கிழங்கில் தோலை மட்டும் தனியாக நீக்கிவிடும்.
அந்த காலத்தில் மணி பார்க்கும் வால் கெடிகாரத்திற்கு தினமும் கீ கொடுக்கவேண்டும் அப்போது தான் அந்த கெடிகாரம் வேலை செய்யும். இதனை பார்த்த ஜி.டி.நாயுடு, 1950இல் அதற்கு ஒரு மாற்று ஐடியா பயன்படுத்தி வாரம் இரண்டு முறை மட்டும் கீ கொடுத்தால் ஓடும் கெடிகாரத்தை கண்டுபிடித்தார். அதேபோல் கட்டிட பயன்பாட்டிற்கான கலவையும் கண்டுபிடித்தார். சிமிண்ட், அரிசி, உமி இவற்றை பயன்படுத்தி வலுவான சிமிண்ட் கலவையை உருவாக்கினார். மேலும் முக்கிய படைப்பாக 1937இல் எலட்ரிக் மோட்டாரை கண்டுபிடித்தார். இந்தியாவில் முதன் முதலில் எலட்ரிக் மோட்டார் அறிமுகப்படுத்தியது இவரே. இப்படியாக எண்ணற்ற படைப்புகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு உலகம் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பது வேதனையே.


Click it and Unblock the Notifications