ஆடம்பரத்தின் உச்சம்! இந்தியாவின் விலையுயர்ந்த சொகுசு வீடுகள்.. என்னென்ன? பிரமிக்கவைக்கும் சொத்து மதிப்பு!
சொந்த வீடு கட்டுவது ஒவ்வொரு இந்தியரின் ஆசை, கனவு என்றே சொல்லலாம்.. அப்படி கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் கோடீஸ்வரர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப பல கோடி ரூபாய்களை வாரி இறைத்து வீடு கட்டுவது வழக்கம். அப்படியாக பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்தியாவின் விலையுயர்ந்த சொகுசு வீடுகள் என்னென்ன? அதன் மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் பூனவல்லாவின் வீடு இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவரான சைரஸ் பூனவல்லாவின் வீடு அரபிக்கடலின் கரையோரத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இவரின் சொகுசு பங்களா அமைத்துள்ளது. மும்பையில் அமைத்துள்ள அந்த வீட்டின் மொத்த மதிப்பு சுமார் 750 கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கு சொந்தமான வீடு இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. ஈஷா அம்பானிக்கு சொந்தமான அந்த வீட்டின் பெயர் குலிதா அரண்மனை என கூறப்படுகிறது. சகல வசதிகள் நிறைந்த அந்த அரண்மனையின் மதிப்பு சுமார் 1100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் வீடு இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. மும்பையில் 17 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில் அனில் அம்பானி வாழ்ந்து வருகிறார். அந்த வீட்டின் பெயர் Abode என்று அழைக்கப்படுகிறது. ஸ்விமிங் பூல், ஜிம், ஹெலிபேட் உட்பட சகல சொகுசு வசதிகள் நிறைந்த அந்த வீட்டின் மொத்த மதிப்பு சுமார் 5000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் விலையுயர்ந்த இரண்டாவது சொகுசு வீடாக மும்பையில் உள்ள ஜேகே ஹவுஸ் பார்க்கப்படுகிறது. ஆடை நிறுவனமான Raymond நிறுவனத்தின் தலைவராக உள்ளார். மும்பையில் அமைத்துள்ள ஜேகே ஹவுஸின் மதிப்பு சுமார் 6000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் விலையுயர்ந்த சொகுசு வீடாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு உள்ளது. மும்பையில் அமைந்துள்ள இந்த உயரமான வீட்டில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லலாம். கார் பார்க்கிங், ஸ்விமிங் பூல், ஜிம், ஷாப்பிங் மால், ஜிம், ஹெலிபேட் உட்பட சகல சொகுசு வசதிகள் நிறைந்த இந்த வீட்டின் மதிப்பு சுமார் 15000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications