ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட நடிகர்கள்.. யாரெல்லாம்? பட்டியல்!
படத்திற்கு படம் பல கோடி ரூபாய் சம்பளம் பெரும் நடிகர்களில் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட நடிகர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் கோடீஸ்வர நடிகர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,250 கோடி ரூபாய் ஆகும். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த Jolly LLB 3 திரைப்படம் தியேட்டரிலும், ஓடிடி தளத்திலும் அமோக வரவேற்பு பெற்றது வருகிறது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் 'வார் 2'. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளிவந்து கலவையான விமர்சனம் பெற்ற இப்படம், வசூலில் செம ஹிட்டானது. இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3,100 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் சல்மான் கான் உள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஹிந்தி திரைப்படம் 'சிக்கந்தர்'. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது ராஜா சிவாஜி மற்றும் ஒரு பயோகிராஃபி படங்களும் நடித்து வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3,225 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகர் நாகர்ஜுனா மட்டுமே. 2ம் இடத்தை பிடித்துள்ள நாகர்ஜுனாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 5000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வர நடிகராக உள்ளார்.
இறுதியாக, இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வர ஹீரோவாக பாலிவுட் கிங் ஷாருக்கான் உள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 12,931 கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications