இந்தியாவின் பணக்கார சமையல் கலைஞர்களை பற்றி தெரியுமா? யாரெல்லாம்? சொத்து மதிப்பு என்ன?
சினிமா, விளையாட்டு உட்பட பல துறையில் சாதித்து காட்டியவர்கள் கோடிகளிலும் புரளுகின்றனர். ஆனால் நாம் பெரிதும் நோட் செய்யாத துறை தான் சமையல்த் துறை. அப்படியாக சைலெண்டாக சம்பவம் செய்பவர்கள் தான் சமையல் கலைஞர்கள். சமையல் துறையில் சாதனை படைத்தது அதன் மூலம் வெவ்வேறு நாடுகளில் ஹோட்டல்கள் திறந்து அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும், சொந்தமாக யூடியூப் சேனல்கள் உருவாக்கி அதில் சமயல் வீடியோக்கள் பகிர்ந்து அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் பணக்கார சமையல் கலைஞர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் பணக்கார சமையல் கலைஞர்களின் பட்டியலில் 7ம் இடத்தில் அதுல் கோச்சார் உள்ளார். சொந்தமாக உணவகம், டிவி நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் பிரபலமான சமையல் கலைஞராக இருந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 33.4 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் ஹர்பால் சிங் சோகி உள்ளார். வெவ்வேறு சமையல் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதன் மூலம் பிரபலமான சமையல் கலைஞராக இருந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் பணக்கார சமையல் கலைஞர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் கரிமா அரோரா உள்ளார். விதவிதமான, வித்தியாசமான உணவுகளின் மூலம் தனக்கென தனி பிராண்டை உருவாக்கி அதன் மூலம் பிரபலமான சமையல் கலைஞராக இருந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் ரன்வீர் பிரார் உள்ளார். இந்தியாவின் பிரபல சமையல் கலைஞராக இருந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 45 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் குணால் கபூர் உள்ளார். சோசியல் மீடியாக்களின் மூலம் உலகளவில் பிரபல சமையல் கலைஞராக அறியப்பட்டவர் குணால். இவரின் சொத்து மதிப்பு சுமார் 43-45 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
உலகளவில் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவர் விகாஸ் கண்ணா. பிரதமர் மோடி, ஒபாமா ஆகியோர் இவரின் சமையல் ருசிபார்த்துள்ளதாக கூறப்படுகிறது. சமையல் மட்டுமல்லாமல் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து ஜொலித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 127 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வர சமையல் கலைஞராக சஞ்சீவி கபூர் உள்ளார். விளம்பரங்கள், சமையல் வீடியோக்கள் மூலம் மிகவும் பிரபலமானார். சமையல் சார்ந்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார். தற்போது இவரின் சொத்து மதிப்பு சுமார் 1,165 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications