Home / Photos
கல்கி படத்திற்காக உருவாக்கப்பட்ட வாகனம்.. 'புஜ்ஜி' காரா இல்ல கப்பலா? சுவாரசிய தகவல் இதோ!
By Chandru
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திக்காக ப்ரேதேக்கியமாக உருவாக்கப்பட்ட புஜ்ஜி வாகனம் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தது. இந்த புஜ்ஜி வாகனத்தில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை பார்ப்போம்.
1/7
Share
பாகுபலி படத்திற்கு பின்னர் நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் கல்கி 2898 AD. சைன்ஸ் சிக்ஸன் படமாக உருவாக்கப்பட்ட இப்படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
2/7
Share
ஷூட்டிங் தொடங்கி ரிலீஸ் வரை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது. அதிலும் இப்படத்திக்காக ப்ரேதேக்கியமாக தயாரிக்கப்பட்ட புஜ்ஜி என்ற வாகனம் தான் இப்படத்தின் ஹைலைட்டே.
3/7
Share
புஜ்ஜி வாகனத்தின் வடிவமைப்பை பார்க்கும் போது கொஞ்சம் பேட்மேன் வாகனத்தை போலவும், கொஞ்சம் நீர்முழ்கி கப்பலை போலவும் இருக்கும். கல்கி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே புஜ்ஜி வாகனம் மக்களின் மனதை கவர்ந்துவிட்டது.
4/7
Share
கோவையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று இந்த புஜ்ஜி வாகனத்தை வடிவமைத்துள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. வாகனத்தின் நீளம் 6075 மிமீ, அகலம் 3380 மிமீ, உயரம் 2186 மிமீ ஆகும். மேலும் வாகனத்தின் எடை சுமார் 6 டன் என குறிப்பிட்டுள்ளனர்.
5/7
Share
புஜ்ஜி, பேட்டரியில் இயக்கப்படும் வாகனம் ஆகும். இதில் 94 kW பவர், 9800 Nm டார்க் மற்றும் 47 kWh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வாகனத்தை உருவாக்க மஹேந்திர நிறுவனத்தின் பங்கும் உள்ளது.
6/7
Share
இந்த புஜ்ஜி வாகனத்தில் ஏஐ தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7/7
Share
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று ரிலீசான கல்கி திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் ஃபிலிமிபீட், கல்கி 2898 AD படத்திற்கு 3.5 ரேட்டிங் ரிவியூ கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications