Home / Photos
பிரபுதேவாவின் இரண்டாவது மனைவியா இவங்க? பலரும் பார்த்திடாத போட்டோஸ்.. இதோ!
By Chandru
பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: filmibeat
Share
இந்திய சினிமாவின் 'மைக்கல் ஜேக்சன்' என்ற கொண்டாடப்படுபவர் பிரபு தேவா. நடன கலைஞராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், 1994ம் ஆண்டு 'இந்து' என்று படத்தின் மூலம் நாயகனாக என்ட்ரி கொடுத்தார்.
2/6
Photo Credit: filmibeat
Share
காதலன், லவ் போர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி உள்ளிட்ட பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். நடிகராக சினிமா ரசிகர்களை ஈர்த்த இவர், பட இயக்குநராகவும் என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: filmibeat
Share
தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஸ்டார் நடிகர்களால் ஒருவராக தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். ஹிந்தியிலும் ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
4/6
Photo Credit: filmibeat
Share
நடிகர், நடன கலைஞர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்து அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபு தேவா, 1995ம் ஆண்டு ரம்லத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
5/6
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் பிரபுதேவா-ரம்லத் ஜோடி கடந்த 2011ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். பின்னர் ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சேர்ந்து பொதுவெளியில் வருவது அரிதே. அப்படியே இருவரும் பொதுவெளியில் தோன்றினாலும் ஹிமானி சிங் மாஸ்க் அணிந்துகொள்வார். இந்த நிலையில் தற்போது பிரபுதேவாவின் இரண்டாவது மனைவியான ஹிமானி சிங்கின் போட்டோஸ் இணையத்தகத்தில் வெளியாகியுள்ளது.
6/6
Photo Credit: instagram
Share
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமண நிகழ்ச்சியில் பிரபு தேவா தனது இரண்டாவது மனைவி ஹிமானி சிங் உடன் கலந்துகொண்டார். தற்போது அந்த போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications