Home / Photos
ரூ.800 கோடி வசூல் சாதனை செய்த ஜெயிலர் 2.. எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
By Chandru
கோலிவுட் சினிமாவில் புது சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெவ்வேறு மாநிலங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: filmibeat
Share
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'ஜெயிலர் 2'. மூன்று வாரத்தை கடந்தும் தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை உலகளவில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து புது சாதனை படைத்துள்ளது. ஆனால் 1000 கோடி ரூபாயை தொடுமா என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட வெவ்வேறு மாநிலங்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் எப்படி இருந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2/7
Photo Credit: filmibeat
Share
ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்கு கர்நாடகா மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். அதன்படி கர்நாடகாவில் மட்டும் சுமார் 93 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
3/7
Photo Credit: filmibeat
Share
கேரளா ஃபேன்ஸ் ஜெயிலர் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். அதன்படி கேரளாவில் சுமார் 79 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
4/7
Photo Credit: filmibeat
Share
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரஜினியின் ஜெயிலர் 2, 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
5/7
Photo Credit: filmibeat
Share
வட இந்தியாவிலும் ரஜினிக்கு மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். அதன்படி வட இந்தியாவில் 'ஜெயிலர் 2 ' திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
6/7
Photo Credit: filmibeat
Share
வெளிநாடுகளில் சூப்பர் ஸ்டாருக்கு என்றே மவுசு அதிகம் தான். அந்த வகையில் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 273 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
7/7
Photo Credit: filmibeat
Share
ரஜினியின் 'ஜெயிலர் 2' தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 220 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications