Home / Photos
ரூ.1000 கோடி கனவு பலிக்குமா? ஜெயிலர் 2 படத்தின் 18 நாள் வசூல் எவ்வளவு? புது சாதனை படைத்த ரஜினி?
By Chandru
ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் 2, கடந்த 18 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: filmibeat
Share
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகம் செம ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த அக்டோபர் 15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது.
2/7
Photo Credit: filmibeat
Share
படம் ரிலீஸான முதல் நாள் முதல் ஷோவில் இருந்தே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஜெயிலர் 2 படத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது.
3/7
Photo Credit: filmibeat
Share
ரஜினியின் வசூல் சாதனை படமான 'எந்திரன் 2.0' படத்தின் மாபெரும் வசூலை ஜெயிலர் 2 ஏற்கனவே முறையடித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புது சாதனையை படைத்துள்ளது.
4/7
Photo Credit: filmibeat
Share
வார நாட்களிலும் சரி விடுமுறை நாட்களிலும் சரி படத்தின் வசூல் அமோகமாக உள்ளது. போட்டிருந்த சட்டை கசங்காமல் ஒருவரால் எப்படி வசூல் சாதனை படிக்கமுடியும்? அது சூப்பர் ஸ்டார் ரஜினியால் மட்டுமே முடியும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
5/7
Photo Credit: filmibeat
Share
3 வாரத்தை கடந்த ஜெயிலர் 2 தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருவது தான் ஆச்சரியமே. ஸ்டார் நடிகர்கள் யாருடைய படம் ஆனாலும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் மட்டும் வசூல் நல்ல இருக்கும் பின்னர் வசூல் மந்தமாகிவிடும். ஆனால் ஜெயிலர் 2 மூன்று வாரத்திற்கும் மேலாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
6/7
Photo Credit: filmibeat
Share
இந்த நிலையில் 18 நாட்களை கடந்த ஜெயிலர் 2 இதுவரை 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 800 கோடி கிளப்பில் இணைந்த முதல் தமிழ் படம் என்ற சாதனை ஜெயிலர் 2 படைத்துள்ளது.
7/7
Photo Credit: filmibeat
Share
800 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2, 1000 கோடி ரூபாய் வசூல் கனவை நனவாக்குமா? இல்லையா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications