Home / Photos
Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ரூ.1000 கோடி வசூல் செய்யுமா?
By Chandru
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர் 2' திரைப்படம் கடந்த 4 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: filmibeat
Share
லாங் வீக் எண்டு பூஜா ஹாலிடேஸ் முன்னிட்டு கடந்த வாரம் அக்டோபர் 15ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர் 2' திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ரிலீசானது.
2/7
Photo Credit: filmibeat
Share
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர் முதல் பாகம்' எதிர்பார்த்ததை விட விமர்சத்திலும், வசூலிலும் மாபெரும் வரவேற்பு பெற்றது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு பல மடங்கு லாபம் கொடுத்தது.
3/7
Photo Credit: filmibeat
Share
அதன்படி 'ஜெயிலர் முதல் பாகம்' உலகளவில் சுமார் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. ரூ.1000 கோடியை தொடுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால் ரூ.650 கோடியுடன் வசூல் நின்றது. இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ரிலீசானது.
4/7
Photo Credit: filmibeat
Share
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா என பல முன்னணி திரை பட்டாளங்கள் நடிப்பில் ஜெயிலர் 2 ரிலீசானது. பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசான இப்படம், முதல் நாள் முதல் ஷோவில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற தொடங்கியது.
5/7
Photo Credit: filmibeat
Share
தியேட்டரில் ரிலீஸான முதல் நாளே 130 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த ஜெயிலர் 2, 3 நாட்களில் விஜய்யின் ஜனாயகன் படத்தின் வசூலை ஓவர் டேக் செய்தது. அதாவது 320 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
6/7
Photo Credit: filmibeat
Share
இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் 4 நாள் கலெக்ஷன் விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 கடந்த நான்கு நாட்களில் சுமார் 425 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மாபெரும் வசூல் என்றே சொல்லலாம்.
7/7
Photo Credit: filmibeat
Share
வெறும் நான்கே நாட்களில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த ஜெயிலர் 2, வரும் நாட்களில் இதே வசூல் இருந்தால் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாங்க பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications