Home / Photos
Jailer 2 Box Office: ஜெயிலர் 2 படத்தின் ரூ.1000 கோடி கனவு நிஜமாகுமா? 6 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
By Chandru
சூப்பர் ஸ்டார் ரஜனி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த 6 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: filmibeat
Share
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த அக்டோபர் 15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான திரைப்படம் ஜெயிலர் 2. ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
2/6
Photo Credit: filmibeat
Share
ரிலீஸாகும் முன்பே படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ரிலீஸாகி ரசிகர்களிடையே பயங்கர ஆர்வத்தை தூண்டியது. குறிப்பாக பிந்தாஸ் மற்றும் அல்ல போலேலோ பாடல்கள் செம ஹிட். பெரும் எதிர்பார்ப்புடன் ஜெயிலர் 2 உலகம் முழுவதும் ரிலீசானது.
3/6
Photo Credit: filmibeat
Share
முதல் நாள் முதல் ஷோவில் இருந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ஆடியன்ஸின் கூட்டத்தை கூட்டிய ஜெயிலர் 2, போக போக ஒவ்வொரு ஷோவும் ஹவுஸ் ஃபுல்லாக மாறியது. படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என கொண்டாடினர்.
4/6
Photo Credit: filmibeat
Share
தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வந்த நிலையில் ஜெயிலர் 2 முதல் நாளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. அதேபோல் லாங் வீக் எண்டு என்பதால் அடுத்தடுத்து நாட்களில் வசூலில் ஜோராக இருந்தது.
5/6
Photo Credit: filmibeat
Share
அதன்படி ஜெயிலர் 2 கடந்த 5 நாட்களில் 477 கோடி ரூபாய் வசூல் செய்து 1000 கோடி ரூபாய் கனவை நோக்கி நடையைப்போட்டது. இந்த நிலையில் மொத்தம் 6 நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
6/6
Photo Credit: filmibeat
Share
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் வசூல் சுமார் 541 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக வசூல் மளமளவென உயர்ந்துள்ளது. ரூ.1000 கோடி கனவை ஜெயிலர் நிறைவேற்றுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் ஜெயிலர் முதல் பாகத்தின் வசூல் 605 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications