Jailer 2: ஜெயிலர் 2 பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? யாருக்கு அதிகம்? சம்பள விவரம்!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து தியேட்டரில் சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் ஜெயிலர் 2. அப்படத்தில் நடித்த நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர் 2'. பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸான இப்படம், முதல் நாள் முதல் ஷோவில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சனத்திலும் ஹிட். படம் ரூ.1000 கோடியை கடந்து வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் 2 பட நடிகர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்து ரம்யா கிருஷ்ணன் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு சுமார் 2-5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் காமெடியில் சரவெடி கிளப்பிய யோகி பாபு, இரண்டாவது பாகத்திலும் டார்க் காமெடியில் பார்வையாளர்களை சிரிக்கவைத்தார். யோகிக்கு சுமார் 3 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வில்லத்தனத்தில் மிரட்டும் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா, ஜெயிலர் 2 படத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி ரஜினியவே ஆச்சரியப்படவைத்தார். இவருக்கு சுமார் 5 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டாவது பாகத்தில் என்ட்ரி கொடுத்த நடிகை வித்யா பாலனுக்கு சுமார் 6 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவுக்கு சுமார் 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு சுமார் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதியாக, ஜெயிலர் 2 பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சுமார் 110 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜெயிலர் 2 விமர்சனத்திலும், வசூலிலும் பட்டையைக்கிளப்பி வருகிறது.



Click it and Unblock the Notifications