ரூ.800 கோடியை நெருக்கும் 'ஜெயிலர் 2'.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா? வசூல்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள் என்னென்ன? 'ஜெயிலர் 2' படத்தின் 13 நாள் வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1999ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'படையப்பா'. மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், உலகாவில் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமா வசூல் சாதனை படைத்தது. பின்னர் மீண்டும் 2025ம் ஆண்டு ரீ-ரிலீஸான படையப்பா, ரூ.18 கோடி ரூபாய் வசூல் செய்து மீண்டும் வசூல் சாதனை படைத்தது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் 2005ல் வெளிவந்த திரைப்படம் 'சந்திரமுகி'. காமெடி, ஹாரர் ஜானரில் வெளிவந்த இப்படம், உலகளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர் தோல்வி படம்களுக்கு பின் ரஜினியை தூக்கிவிட்டு படமாக அமைத்தது. இப்படம், உலகளவில் சுமார் 85 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் 'சிவாஜி தி பாஸ்'. இப்படம், உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக சாதனை படைத்தது.
சிவாஜி பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஷங்கருடன் இணைந்த ரஜினி 'எந்திரன்' படத்தை கொடுத்தார். அப்படம் இந்திய சினிமாவையே வியந்து பார்கவைத்து. ரோபோட்டை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமாக வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது. அதன்படி உலகளவில் இப்படம், 290 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கபாலி'. உலகளவில் கொண்டாடப்பட்ட இப்படம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து புது சாதனை படைத்தது.
எந்திரன் பட வெற்றியை தொடர்ந்து 'எந்திரன் 2.0' உருவானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவான இப்படம், உலகளவில் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. வேற லெவல் ஹிட்டான இப்படம், உலகளவில் சுமார் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவின் முதல் 500 கோடி வசூல் செய்த படமாக 'எந்திரன் 2.0' சாதனை படைத்தது.
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'ஜெயிலர் 2'. இப்படத்தின் முதல் பாகம் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் இரண்டாம் பாகம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ரிலீசானது. எதிர்பார்த்ததைவிட படம் வேற லெவல் என ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்தை கொண்டாடினர். அதன்படி இப்படம் ரிலீஸாகி 13 நாட்களில் சுமார் 744 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 1000 கோடி ரூபாய் வசூல் தான் ஜெயிலர் 2 படத்தின் டார்கெட்டாக உள்ளது. இருப்பினும் தற்போது 800 கோடி ரூபாய்யை நெருங்கியுள்ளது.



Click it and Unblock the Notifications