Jailer 2 OTT: ஓடிடியில் ரிலீஸாகும் வசூல் சாதனை படைத்த ரஜினியின் 'ஜெயிலர் 2'.. எப்போ? எதில் பார்க்கலாம்?
ரஜினியின் 'ஜெயிலர் 2' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. வாங்க எந்த ஓடிடி? எப்போது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினி, மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், மலையாள நடிகர் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஜெயிலர், 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. அப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 எதிர்பார்ப்புடன் உருவானது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுராஜ் வெஞ்சாரமூடு உட்பட பல பிரபலங்கள் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவானது. கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது.
முதல் பாகத்தை விடவும் இரண்டாவது பாகம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அனிருத்தின் இசையும், ரஜினியின் மாஸ் காட்சிகளும் படத்தின் ஹைப்பை பலமடங்கு உயர்த்தியது. அதன்படி படம் ரிலீஸாகி முதல் நாள் முதல் ஷோவில் இருந்தே தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
தியேட்டரில் அனைத்து ஷோவும் ஹவுஸ்ஃபுல். சினிமா ரசிகர்கள் கூட்டம் ஒருபக்கம், குடும்ப ஆடியன்ஸ் கூட்டம் மறுபக்கம் என தியேட்டரே நிரம்பிவழிந்தது. விமர்சனத்திலும் சரி, வசூலிலும் சரி படம் மெகா ஹிட். அதன்படி 250-300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 820 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் புது சாதனை படைத்தது.
இன்றும் தியேட்டரில் வெற்றிநடைபோடும் ஜெயிலர் 2 தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. அதன்படி ஜெயிலர் 2 நாளை நவம்பர் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. தியேட்டரில் மிஸ் செய்திருந்தால் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.



Click it and Unblock the Notifications