ஜனநாயகன் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு? விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கணிப்பு!
விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. விஜய்யின் இறுதி படமும் இதுவே. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ளவுள்ளார். விஜய் மோதும் முதல் தேர்தல் என்பதால் 'ஜனநாயகன்' மிக முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. திரையில் அரசியல் பேசுவது விஜய்க்கு புதிதல்ல. ஆனால் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள ஜனநாயகன் படத்தில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகம் உள்ளது. படத்தின் டைலர் சமீபத்தில் வெளியாகி செம வைரலானது. இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வினோத், இது ரீமேக் இல்லை வேற மாதிரியான படம் என்று கூறியிருந்தார். ஆனால் ஜனநாயகன் ஒரு ரீமேக் படம் தான் நெட்டிசன்கள் டீகோட் செய்துவிட்டனர். 2023ல் பாலய்யா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் 'ஜனநாயகன்' என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாக்களில் விமர்சித்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க படத்தின் பட்ஜெட் மற்றும் நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு? ஒவ்வொரு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுமார் 352 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 380-400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான விஜய்யின் 'கோட்' படத்தை விட 'ஜனநாயகன்' படத்தின் பட்ஜெட் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 'பீஸ்ட்' படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்த நிலையில் மீண்டும் 'ஜனநாயகன்' படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சுமார் 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ராக்ஸ்டார் அனிருத், ஜனநாயகன் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய்யின் மாஸ்டர், லியோ ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத், விஜய்யின் இறுதி படமான ஜனநாயகன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவருக்கு சுமார் 13 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு வில்லனாக நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவர், இதற்கு முன் சூர்யாவின் 'கங்குவா' படத்தில் நடித்திருந்தார். அதேபோல் ஹிந்தியில் வெளிவந்த 'அனிமல்' படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் அதிகம் லைக் செய்யப்பட்டது. ஜனநாயகன் படத்தில் வில்லனாக நடிக்க சுமார் 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மலையாள நடிகை மமிதா பைஜூ, 'டியூட்' படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார். இவர், 'ஜனநாயகன்' படத்தில் விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் கேப்டன் இயக்குநர் எச். வினோத், இப்படத்தை இயக்க 25 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் பாலய்யாவின் 'பகவந்த் கேசரி' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'ஜனநாயகன்' என்று நெட்டின்கள் விமர்சித்து வருகின்றனர்.
இறுதியாக, படத்தின் நாயகன் விஜய், இப்படத்தில் நடிக்க சுமார் 220 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. விஜய்யின் இறுதி படம் இதுவே. அதன் பின்னர் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவுள்ளார். படம் வரும் பொங்கலுக்கு கோலாகலமாக ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications