OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Paradise'. இத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த 23ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
ஹிந்தியில் உருவாகியுள்ள ரொமான்டிக் வெப் தொடர் 'Sangamarmar'. இத்தொடர் இன்று 26ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் வெப் தொடர் 'Secret Stories: Roslin'. இத்தொடர் நாளை 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திகில் திரைப்படம் 'Black Phone 2'. இப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வரும் 28ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், காமெடி, க்ரைம், சயின்ஸ் பிக்ஷன், ஏலியன் திரைப்படம் 'Bugonia'. இப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வரும் 28ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
பிரபல காமெடியன் கிறிஸ் ஃப்ளெமிங் நடத்தும் காமெடி ஷோ 'Chris Fleming'. இந்த நிகழ்ச்சி வரும் 28ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications