OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடியில் தளங்களில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகளவில் வசூலிலும், விமர்சனத்திலும் மாபெரும் வரவேற்பு பெற்ற துரந்தர் இரண்டாம் பாகம் நாளை ஜூன் 5ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படம் 'Patriot'. அதிரடி ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் நாளை ஜூன் 5ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'KD: The Devil'. துருவா சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்த திரில்லர் படம் நாளை ஜூன் 5ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'Brown'. போலீஸ் விசாரணையும் அதனை சுற்றி நடக்கும் சுவாரசிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இத்தொடரின் முதல் சீசன் நாளை ஜூன் 5ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2019இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் காமெடி ட்ராமா ஃபேமிலி வெப் தொடர் 'Gullak'. இத்தொடரின் 5வது சீசன் நாளை ஜூன் 5ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications