OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2024இல் ஹிந்தியில் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படம் 'Main Ladega'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட பாக்சிங் திரைப்படம். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள கால்பந்து ஸ்போர்ட்ஸ் ட்ராமா வெப் தொடர் 'Panthadikkaam'. இத்தொடர் இன்று 1ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. இப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் நாளை 2ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த காமெடி, க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Mother Promise'. இப்படம் நாளை 2ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
ஹுமா குரேஷி, மிருணாள் தாகூர் ஆகியோர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த மிஸ்ட்ரி, ரொமான்ஸ், திரில்லர் திரைப்படம் 'Pooja Meri Jaan'. இப்படம் நாளை 2ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
திரில்லர் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள ஹாலிவுட் வெப் தொடர் 'War'. இத்தொடரின் முதல் சீசன் இன்று 1ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications