OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய படங்கள் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
யோகி பாபு நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'கெணத்த காணோம்'. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
தெலுங்கில் வெளிவந்த ஃபேமிலி ட்ராமா வெப் தொடர் 'Raktha Sambandham'. இத்தொடர் இன்று 18ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'Dhairye Sahase Amrutha'. இப்படம் இன்று 18ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
பசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'அதிரடி'. இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் நாளை 19ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி, திரில்லர் வெப் தொடர் 'Saving the Tigers'. இத்தொடரின் மூன்றாவது சீசன் நாளை 19ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
இந்திரன்ஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'Aashaan'. இப்படம் நாளை 19ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
சஞ்சு குரூப் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஃபேண்டஸி, ஹாரர் திரைப்படம் 'Gu'. இப்படம் நாளை 19ம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Razor'. ரவி பாபு நடிப்பில் வெளிவந்த இப்படம் நாளை 19ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் வெப் தொடர் 'Thukra Ke Mera Pyaar'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 19ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications