OTT: லாங் வீக் எண்டு வந்தாச்சு.. இந்த வார ஜியோ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ5 ஓடிடி ரிலீஸ் என்னென்ன? தரமான படங்களின் லிஸ்ட்!
விதவிதமான புதுப் படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களை அலங்கரித்து வருகின்றன. அந்த வகையில் இந்த லாங் வீக் எண்டை அலங்கரிக்க ஜியோ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ5 ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி, சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் ஜானரில் வெளிவந்த ஏலியன் திரைப்படம் 'Disclosure Day'. இந்த ஹாலிவுட் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. மேலும் அமேசான் பிரைம் தளத்தில் பணம் செலுத்தி பார்க்கலாம்.
கலக்கலான காமெடி ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள மலையாள வெப் தொடர் 'Kappi Squad'. இத்தொடரின் முதல் சீசன் இன்று 15ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'DC'. ஏற்கனேவே சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸான இப்படம், நாளை 16ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஜோஜு ஜோர்ஜ், ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Aasha'. இந்த மலையாள திரில்லர் திரைப்படம் நாளை 16ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'Kaagitham Padavalu'. சிறுவயது நண்பர்களுக்கிடையே ஏற்படும் காதல் மோதல் பற்றிய ரொமான்டிக் கதை. இப்படம் நாளை 16ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஸ்வாசிகா விஜய், சமுத்திரக்கனி, ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடிப்பில் 20204இல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Oru Anveshanathinte Thudakkam'. இந்த திரில்லர் மலையாள படம் நாளை 16ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
அதிரடி ஆக்ஷன் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Jeet Ki Zid'. ஓய்வுபெற்ற இந்திய ராணுவ சிறப்புப்படை அதிகாரியான மேஜர் தீபேந்திர சிங் செங்கரின் வாழ்க்கையை பற்றிய கதை தான் இத்தொடரின் கதைக்களம். இத்தொடரின் முதல் சீசன் நாளை 16ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.



Click it and Unblock the Notifications