OTT Release: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தரமான படங்கள்.. என்னென்ன?
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Bhishmar'. இப்படம் நாளை 22ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Shesha 2016'. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போலீசுக்காரர்களின் கதைக்களம். இப்படம் நாளை 22ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2022இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் வெப் தொடர் 'SkyMed'. ஏர் ஆம்புலன்ஸை இயக்கும் விமானிகளும் உடன் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் சந்திக்கும் சிக்கல்களை பற்றிய கதைக்களம். இத்தொடரின் 4வது சீசன் நாளை 22ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Madhuvidhu'. இப்படம் நாளை 22ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் 'Memu Copulam'. கலக்கலான இந்த ஃபீல் குட் காமெடி தொடர் நாளை 22ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
விலங்கு வெப் தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி நடித்துள்ள வெப் தொடர் 'வாரண்ட்'. இந்த க்ரைம், திரில்லர் வெப் தொடர் நாளை 22ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'Sathi Leelavathi'. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications