Home / Photos
PHOTOS: 47 வயதாகும் 'காதலர் தினம்' ரோஜாவா இது? அதே இளமையுடன் எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா! ரீசன்ட் க்ளிக்ஸ்!
By Chandru
kadhalar dhinam movie actress Sonali Bendre latest photos stunned her fans. check out the full details of her.
1/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் டாப் காதல் படங்கள் எவை எவை என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் இடத்தை பிடிப்பது காதலர் தினம் படம் தான். எத்தனையோ காதல் படங்கள் வந்திருந்தாலும் இன்று வரை பலரின் ஃபேவர்ட் படமாக, அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸின் மனதை டச் பண்ணிய படமாக காதலர் தினம் திரைப்படம் இருந்து வருகிறது. அப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களையும் இன்றும் கேட்டால் செம்ம பிரெஷாக இருக்கும். இப்படியாக காதலர்களின் மனம் கவர்ந்த படமான காதலர் தினம் படத்தில் நடித்த ஹீரோயின் பற்றி பார்ப்போம்..
2/7
Photo Credit: instagram
Share
இயக்குநர் கதிர் இயக்கத்தில் நடிகர் குணால், நடிகை சோனாலி நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் காதலர் தினம். இசைப்புயல் ஏஆர் ரஹமான் இசையில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
3/7
Photo Credit: instagram
Share
பட்டித்தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான இப்படத்தை சினிமா ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர். வசூலிலும், விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய வெற்றி படமாக வலம் வந்தது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர். அதிலும் ஹீரோயின் ரோஜா கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.
4/7
Photo Credit: instagram
Share
ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்த சோனாலி, தமிழில் காதலர் தினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் வேறு எந்தப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் நடித்த ஒரே ஒரு படமும் மெகா ஹிட் படமாக மாறியது. தமிழ் சினிமாவை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
5/7
Photo Credit: instagram
Share
ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோனாலியை ரசிகர்கள் இன்றும் ரோஜா என்று தான் குறிப்பிட்டு அழைத்து வருகின்றனர். ஆமாம் யார் அந்த சோனாலி? சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் பிரபலமான மாடலாக வலம் வந்தவர் நடிகை சோனாலி. மாடலிங்கில் கிடைத்த புகழ் சினிமா வாய்ப்புகளை பெற உதவியது.
6/7
Photo Credit: instagram
Share
திரை வாழ்க்கையில் தகதகவென ஜொலித்த சோனாலிக்கு மிக பெரிய அடி விழுந்தது என்றே சொல்லலாம். மார்பக புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்துள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்ட சோனாலி புற்றுநோய் விழிப்புராணவு பிரச்சாரத்தையும், விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் சோசியல் மீடியாக்களில் அதிகம் ஆகிட்டிவாக இருந்து வருகிறார் சோனாலி.
7/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் தற்போது 47 வயதாகும் சோனாலி அதே அழகுடன் இளமை குறையாமல் பளபளவென ஜொலிக்கும் மேனியுடன் மாடர்ன் ட்ரெஸ்ஸிலும், ட்ரடிஷனல் லுக்கில் அவ்வப்போது எடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம ரோஜாவா இது? என இன்ஸ்டா போஸ்டுக்கு ஏகப்பட்ட லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications