Home / Photos
காதலனை கரம் பிடித்த 'கனா' சீரியல் நடிகை.. தடபுடலாக நடந்த திருமணம்.. ட்ரெண்டாகும் போட்டோஸ்!
By Chandru
சீரியல் நடிகை தர்ஷனா அசோகன் தனது நீண்ட நாள் காதலனை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிரது.
1/7
Photo Credit: instagram
Share
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கனா சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் நடிகை தர்ஷனா அசோகன். அசத்தலான நடிப்பு, ஈர்க்கும் அழகு என தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிவைத்துள்ளார்.
2/7
Share
வசீகரமான அழகுக்கும், நடிப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரேவேற்பு கிடைத்து வந்த நிலையில், சமீபத்தில் தான், இவர் கனா சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இவரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு இடியாக விழுந்தது. அந்தளவுக்கு மக்களின் மனதில் குடியிருந்தார், தர்ஷனா.
3/7
Share
இவரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லியாகவேண்டும். இருப்பினும் தொடர் நகரவேண்டுமே.. இதனால் இவருக்கு பதில் நாயகி கதாபாத்திரத்தில் துணிஷா என்ற புதுமுக நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
4/7
Photo Credit: instagram
Share
ஆனால் தர்ஷனா, சீரியலை விட்டு விலக என்ன காரணம் என ரசிகர்கள் தேடி வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்.
5/7
Photo Credit: instagram
Share
நடிகை தர்ஷனா, அபிஷேக் என்பவரை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இது பலருக்கும் தெரிந்ததே. அபிஷேக்குடன் ஊர் சுற்றும் புகைப்படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருவார். இவர்களின் காதல் உறவு தற்போது அடுத்தபடிக்கு முன்னேறியுள்ளது.
6/7
Share
தர்ஷனா தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார், நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.
7/7
Photo Credit: instagram
Share
மிகவும் சிம்பிளாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது. தர்ஷனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிஷேக்கின் மனைவி என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications