Home / Photos
PHOTOS : திருநங்கைகள் இடையே தள்ளுமுள்ளு...சாலையில் உருண்டு புரண்டு போராட்டம்..காஞ்சிபுரத்தில் சம்பவம்!
By Chandru
காஞ்சிபுரத்தில் திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1/8
Share
காஞ்சிபுரத்தில் திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2/8
Share
காஞ்சிபுரம் நகரப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
3/8
Share
இவர்களில் திருநங்கை தனம் தலைமையில் ஒரு பிரிவினரும் சங்கீதா தலைமையில் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர்.இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
4/8
Share
இந்நிலையில் தனம் பிரிவினைச் சேர்ந்த திருநங்கைகள் மீது நேற்று நள்ளிரவு சங்கீதா தலைமையிலான திருநங்கைகள் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்தனர்.
5/8
Share
இதனால் 15க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உடல் மீது மண்ணெண்ணையை உற்றிக்கொண்டு தீ குளிப்பதாக கூறி, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை ஓரிக்கை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
6/8
Share
இதன் காரணமாக ஓரிக்கை கூட்டு சாலையில் நான்கு புறமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
7/8
Share
மேலும் சாலை மறியல் குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுக்காகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
8/8
Share
இந்நிலையில் திருநங்கைகளின் தனிப்பட்ட பிரச்சினைக்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலநூறு வாகனங்கள் சாலையில் நின்றதால் பொதுமக்கள்,அதிருப்தியடைந்தனர்.


Click it and Unblock the Notifications