2025ல் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கன்னட நடிகைகள்.. டிராகன் பட நடிகையுமா? வேற யாரெல்லாம் பாருங்க!
தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கன்னட நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னட சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் ஜொலித்து வருபவர் நடிகை சைத்ரா அசார். 'மஹிரா' என்ற கன்னட படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். கன்னட ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர், '3 பிஎச்கே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இளசுகளின் கவனம் ஈர்த்துள்ளார்.
கயாடு லோஹரை தெரியாதவர்கள் இருக்கமுடியுமா? தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார். கன்னட சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். பின்னர் கடைசியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த 'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அறிமுக படமே இவரை மிகவும் பிரபலமாகியது. மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
கன்னட சீரியலில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை மேகா ஷெட்டி. பின்னர் கன்னட வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்கத் தொடங்கினார். கன்னடத்தில் மொத்தமே மூன்று படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார் என்றாலும் ரசிகர்களிடையே மவுசு அதிகம். தற்போது மேலும் மூன்று கன்னட படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சசிகுமார், பரத் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதன் மூலம் தனது தமிழ் சினிமா பயணத்தை தொடஙகியுள்ளார்.
கன்னட சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரச்சிதா ராம். பின்னர் 2013ம் ஆண்டு கன்னடம் படம் ஒன்றில் நாயகியாக நடித்து வெள்ளைத்திரையில் என்ட்ரி கொடுத்தார். சுமார் 20 கன்னட படத்திற்கும் மேல் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், ரஜினியின் 'கூலி' திரைப்படத்தில் கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். மேலும் பல தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட சினிமாவில் மிகவும் பாப்புலரான நடிகை ருக்மணி வசந்த். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர், விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மதராஸி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் கவனம் ஈர்த்துள்ளார். இவருக்கும் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications