Home / Photos
இப்போ தான் மகளுக்கு கல்யாணம் ஆச்சு! பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சௌந்தர்யா ஜெகதீஷ் தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீஸ்!
By Chandru
பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான சௌந்தர்யா ஜெகதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1/6
Share
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவர் சௌந்தர்யா ஜெகதீஷ். இவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தான் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 55 வயதான சௌந்தர்யா ஜெகதீஷ் நேற்று பெங்களூருவில் உள்ள அவரின் வீட்டில் அதிகாலை 4 மணி அளவில் தற்கொலை செய்துகொண்டார்.
2/6
Share
ஆனால் இவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் 9.40 மணிக்கு தான் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக சௌந்தர்யா ஜெகதீஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெகதீஷின் இந்த தற்கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின் வழக்கு பதியப்பட்டுள்ளது.
3/6
Share
எதற்காக ஜெகதீஷ் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வேறு எதுவும் பிரச்சைனைகள் இருக்கா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் சமீபகாலமாக மன உளைசச்சல் காரணத்திற்காக மருந்துகளை எடுத்துக்கொண்டு வந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
4/6
Share
இவருக்கு பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று ஜெகதீஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஜெகதீஷின் தற்கொலை மர்மமாக இருந்து வருகிறது. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமீபத்தில் தான் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் ஜெகதீஷ்.
5/6
Share
திரைப்பட தயாரிப்பாளராக இருந்த ஜெகதீஷ் பெங்களூருவில் சொந்தமாக பார் ஒன்றரை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரின் பாருக்கு சிக்கல் ஏற்பட்டது. விதியை மீறி இரவு 1 மணிக்கு மேல் பாரை திறந்து வைத்திருந்ததால் ஜெகதீஷ் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
6/6
Share
ஜனவரி மாதத்தில் இருந்து வழக்கை எதிர்கொண்டு வந்த ஜெகதீஷ் நேற்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரின் தற்கொலைக்கு இது காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஜெகதீஷின் தற்கொலை கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications