Karuppu: சூர்யா முதல் ஸ்வாசிகா வரை.. 'கருப்பு' படத்திற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தியேட்டரில் வெற்றிநடைபோடும் சூர்யாவின் கருப்பு திரைப்படங்கள் நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கருப்பன் வரன்: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'கருப்பு'. பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இப்படம், படக்குழு திட்டமிட்டபடி 14ம் தேதி ரிலீசாகவில்லை. சில பஞ்சாயத்தால் படம் குறிப்பட்ட நாளில் ரிலீசாகாமல் போக இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மனமுடைந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தடங்கல்: சிலர் பட ரிலீசாவதை தடுப்பதாக ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில் படம் மறுநாள் 15ம் தேதி உலகம் முழுவதும் கோலாகலத்துடன் ரிலீசானது. முதல் நாள் முதல் ஷோ தியேட்டரில் நல்ல கூட்டம். போக போக படம் பாசிடிவ் ரிவ்யூ பெற தொடங்கிய நிலையில் ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் அலைமோத தொடங்கியது.
ஹிட்டோ ஹிட் : வீக் எண்டு நாட்களில் குடும்பத்துடன் சாரைசாரையாக தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுக்க தொடங்கிய நிலையில் படத்தின் வசூல் மளமளவென உயரத் தொடங்கியது. வெறும் மூன்றே நாட்களில் 135 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து கலெக்ஷனில் மாஸ் காட்டி வருகிறது. விடுமுறை நாள் என்பதால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சம்பளம்? தியேட்டரில் வெற்றிநடைபோடும் 'கருப்பு' திரைப்படத்தில் நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவு என்பதை வாங்க பார்ப்போம்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களின் மனம் கவர்ந்த ஸ்வாசிகா, இப்படத்தில் நடிக்க 40 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலையாள நடிகர் இந்திரன்ஸ், கருப்பு படத்தில் நடிக்க 80 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவுக்கு இணையாக இந்திரன்ஸின் நடிப்பு மெரட்டலாக இருந்ததாக பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் நட்டி நட்ராஜ், கருப்பு படத்தில் நடிக்க 1.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம். நடிகை த்ரிஷாவுக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இயக்குநரும், நடிகருமான ஆர்ஜே பாலாஜிக்கு 4 கோடி ரூபாய்க்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் நாயகன் சூர்யாவுக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். தியேட்டரில் வெற்றிநடைபோடும் 'கருப்பு' விரைவில் ரூ.200 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் அனைத்தும் அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications