இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி கண்ட கென் கருணாஸ்.. வசூல் வேட்டை நடத்தும் 'யூத்' படத்தின் 4 நாள் கலெக்ஷன் எவ்வளவு?
கென் கருணாஸ் இயக்கி நடித்த 'யூத்' திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வரவேற்பு: சின்ன பட்ஜெட் படங்கள் அதிலும் தரமான கதை இருக்கும் சின்ன படங்களுக்கு நம் மக்கள் அமோக வரவேற்பு, ஆதரவு கொடுக்க தயங்குவதில்லை. அப்படியாக சின்ன பட்ஜெட்டில் வெளிவந்து மக்கள் கவனம் ஈர்த்துள்ள திரைப்படம் யூத்.
கென் கருணாஸ்: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் கென் கருணாஸ். பின்னர் அசுரன், வாத்தி உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். கேரக்டர் ரோலில் நடித்து வந்த கென், யூத் படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
யூத்: கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் யூத். இப்படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்ஸ். அனிஷ்மா, மீனாட்சி, பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கென்னுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் சுராஜ், தேவதர்ஷினி, நளினி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கதை சுருக்கம்: பள்ளி பருவ காதல் யாருக்கு தான் இல்லை.. அப்படி நம் ஹீரோ கென்னுக்கும் பள்ளி பருவ காதல் வருகிறது. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் மூன்று காதலை சந்திக்கிறார், கென். 10ம் வகுப்பில் சரியாக படிக்காமல் பாடரில் பாஸ் ஆகி +1, +2 படிக்கிறார். படிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் காதல் வலையில் விழுகிறார்.
காதல் மயக்கத்தில் இருக்கும் கென்னுக்கு படிப்பின் அவசியம் தெரியும் வகையில் குடும்பத்தில் முக்கிய சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதன் பின்னர் தனது குடும்பம், தனது எதிர்க்கலாம் என என்பதை பற்றி யோசிக்கத்தொடங்குகிறார். அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதே படத்தின் கதை.
டீன் ஏஜ் இளைஞர்களின் பருவ காதலும் அதனால் வரும் பின்விளைவுகள் என்னென்ன என்பதை சொல்லும் படமாக வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. பார்வையாளர்களுக்கு தங்களின் பள்ளி பருவ காதல், பள்ளியில் செய்த சேட்டைகள் இவைகளை நினைவூட்டும் படமாகவும் அமைத்துள்ளது.
முதல் படத்திலேயே மாஸ்: முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்த கென், யூத் படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் என்ட்ரி கொடுக்க மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்ற தயக்கத்துடன் களமிறக்கியுள்ளார். வழக்கம் போல் நம் மக்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது போல் இந்த ஜாலியான ஃபீல் குட் படத்திற்கு அமோக ஆதரவு கொடுக்க கென் அறிமுக இயக்குனராகவும், ஹீரோவாகவும் வெற்றி கண்டு மக்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
பட்ஜெட்? வசூல்? வெற்றிநடைபோடும் கென்னின் யூத், வெறும் 6-8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான யூத், முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தத் தொடங்கியது. பாசிட்டிவ் விமர்சனம் வர தொடங்கிய நிலையில் வீக் எண்டு நாட்களில் குடும்பத்துடன் சாரைசாரையாக யூத் படம் பார்க்க குவித்தனர். அந்த வகையில் கடந்த 4 நாட்களில் இப்படம் உலகளவில் சுமார் 23.68 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. பான் இந்தியா படமான துரந்தர் ரிலீஸாகியும், யூத் திரைப்படம் வசூலில் விட்டுக்கொடுக்காமல் ஹிட் கொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications