Home / Photos
தமிழ்நாட்டின் தங்க மகன்.. பொற்கால ஆட்சி கொடுத்த கர்மவீரர் காமராஜர்
By Chandru
தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
1/11
Share
தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
2/11
Share
காமராஜர் 1903 ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்த இவர் பொற்கால ஆட்சி நடத்தினார்.
3/11
Share
தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
4/11
Share
பாரத மிகு மின் நிறுவனம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை ஆகியவை இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது
5/11
Share
காமராஜரின் மறைவுக்கு பின், 1976 இல் மத்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
6/11
Share
2006இல் கழக ஆட்சியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஜூலை 15-ம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அறிவித்து, அரசு ஆணை வெளியிட்டது.
7/11
Share
பின் எதிர்காலத்தில் மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சட்டமாகவே நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் என்பதை இங்கு நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
8/11
Share
கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளை திறந்து வைத்தார் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
9/11
Share
டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கண் தந்து அவர்களது தலைமுறைகளை மாற்றிய பெருந்தலைவர் காமராஜர் என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications