Home / Photos
PHOTOS: அட இவங்களுமா? ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் கோலிவுட் பிரபலங்களின் லிஸ்ட்.. யார் யாருன்னு பாத்தீங்களா!
By Chandru
கோலிவுட் திரை துறையில் யார் யாரெல்லாம் ஆடம்பரமான, விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கார் வகைகளில் எத்தனையோ ரகங்கள் இருந்தாலும் பலரின் கண்ணை உறுத்துவது இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் தான். பிரமாண்டம், ஆடம்பரம், சொகுசு, பாதுகாப்பு என ரோல்ஸ் ராய்ஸ் காரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவரின் அந்தஸ்தை உயர்த்தி காட்டும் பிராண்டாக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அந்தவகையில் கோலிவுட் சினிமாவில் எந்தெந்த பிரபலங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ளனர், அதன் விலை என்னவென்று பார்ப்போ
1/8
Share
கோலிவுட் திரை துறையில் யார் யாரெல்லாம் ஆடம்பரமான, விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கார் வகைகளில் எத்தனையோ ரகங்கள் இருந்தாலும் பலரின் கண்ணை உறுத்துவது இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் தான். பிரமாண்டம், ஆடம்பரம், சொகுசு, பாதுகாப்பு என ரோல்ஸ் ராய்ஸ் காரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவரின் அந்தஸ்தை உயர்த்தி காட்டும் பிராண்டாக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அந்தவகையில் கோலிவுட் சினிமாவில் எந்தெந்த பிரபலங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ளனர், அதன் விலை என்னவென்று பார்ப்போம்.
2/8
Share
லெஜண்ட் சரவணா: லெஜண்ட் சரவணாவை தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியுமா.. தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணா தனது கடை விளம்பரத்தில் நடித்து தொலைக்காட்சி வழியாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மிக பெரிய கார் பிரியரான அருள் சரவணன் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். மாதம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலதிபராக வலம் வரும் லெஜண்ட் சரவணனிடம் ரோல்ஸ் ராய்ஸ் இல்லைனா எப்படி.. லெஜண்ட் சரவணா சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வைத்துள்ளார்.
3/8
Share
ஹன்சிகா: ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கும் ஒரே தமிழ் நடிகை ஹன்சிகா தான். கொழுக் மொழுக் நடிகையாக ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் ஹன்சிகா. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்ஷிகா, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ளார்.
4/8
Share
ராதாகிருஷ்ணன்: அவன் இவன், எல்லாம் அவன் செயல், புலி வேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து மூலம் தமிழில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராதாகிருஷ்ணன். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வைத்துள்ளார்.
5/8
Share
ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக பெரிய கார் பிரியர், கார் என்றல் அவ்வளவு பிரியம் என்று பல மேடைகளில் அவரே கூறியிருப்பார். தனது கார் கலெக்சனில் 9 உயர்ரக சொகுசு கார்களை வைத்துள்ளார், இதில் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் அடங்கும். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்று இரண்டு ரகங்களை ரஜினி வைத்துள்ளார்.
6/8
Share
விஜய்: தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய். ரஜினியை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் வலம் வருகிறார். படத்தில் நடிக்க சுமார் 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும், அந்த காரின் மாடல் கோஸ்ட் சீரிஸ் 2, அதன் விலை சுமார் 6 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரை இருக்கும் என டககவல் வெளியாகியுள்ளது.
7/8
Share
ஷங்கர்: தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இந்தியன், அந்நியன், ஐ உள்ளிட்ட பல பிரமாண்டமான வெற்றி படங்களை கொடுத்தவர் ஷங்கர். பிரமாண்ட இயக்குநருக்கு பிரமாண்டமான கார் தேவை தானே!.. அந்தவகையில் 3.45 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை ஷங்கர் வைத்துள்ளார்.
8/8
Share
தனுஷ்: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தவிர்க்கமுடியாத நடிகராக கலக்கி வருகிறார். அதேபோல் ஹோலிவுட்டிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார். இப்படியாக சினிமா உலகில் பல அவதாரம் எடுத்துள்ள தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 காரை வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை சுமார் 6 கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications