மண்டாடிக்கு போட்டியாக.. ஓடிடியில் ரிலீஸாகவுள்ள மலையாள க்ரைம், திரில்லர் திரைப்படம்.. என்ன படம்? எதில்? எப்போது?
மலையாளத்தில் வசூல் வேட்டை நடத்திய லேட்டஸ்ட் திரில்லர் படமான 'பிரதம த்ரிஷ்டியா குட்டக்கர்' ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. சூரியின் மண்டாடி படத்திற்கு போட்டியாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள இப்படத்தை எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
திரில்லர்: க்ரைம், திரில்லர், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் சம்பவங்கள் நிறைந்த மலையாள படங்களுக்கு சினிமா ரசிகர்கள் அமோக வரவேற்பு தருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான திரில்லர் மலையாள படங்கள் அமோக வரவேற்பு வருகிறது. தமிழ் ஆடியன்ஸும் அமோக ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்து மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ஒன்று தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. வாங்க என்ன படமுன்னு பார்ப்போம்.
என்ன படம்: இயக்குநர் ஷஹாத் நிலம்பூர் இயக்கத்தில் பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், ஜெயஸ்ரீ சிவதாஸ் உட்பட பலர் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'பிரதம த்ருஷ்ட்யா குட்டக்கர்' (Pradhama Drishtiya Kuttakkar).
கதை என்ன? காவல்நிலையத்தில் இரவு பணியில் இருக்கும் நான்கு ஐந்து காவலர்கள் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அடித்து கொன்றுவிடுகின்றனர். இந்த கொலை சம்பவத்தை மறைக்க தங்களால் முடிந்தவரை அங்கிருந்த ஆதாரங்களை மறைத்துவிடுகின்றனர்.
ஆதாரத்தை மறைத்துவிட்டோம் என காவலர்கள் பெருமூச்சு விட அடுத்தநொடியே இந்த வழக்கு குற்றப்பிரிவு அதிகாரியிடம் செல்கிறது. அவர் வில்லாதி வில்லன் போல் தெரிகிறது. கொலை எப்படி நடந்தது என்ற ஆதாரத்தை தீவிரமாக தேட தொடங்குகிறார். விசாரணை கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க, கொலை செய்த காவலர்கள் அதில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்கின்றனர்? விசாரணையில் உண்மை வெளிவந்ததா? என்பதே படத்தின் மீதி த்ரில் கதை.
சின்ன பட்ஜெட் பெரிய வசூல்: குறைந்த பட்ஜெட் அதாவது வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. தியேட்டரில் அமோக வரவேற்பு பெற்ற இப்படம், தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
ஓடிடி? சூரியின் சூப்பர் ஹிட் படமான 'மண்டாடி' ரிலீஸாகும் அதே ஓடிடி தளத்தில் தான் இப்படமும் ரிலீஸாகவுள்ளது. அதாவது வரும் ஆக்டொபர் 9ம் தேதி இப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸாகவுள்ளது. சூரியின் மண்டாடி அதே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 8ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த இரு சூப்பர் ஹாட் படங்களையும் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications