தியேட்டரில் ரிலீஸான லேட்டஸ்ட் தமிழ் படங்கள்.. எந்த படத்திற்கு எவ்வளவு ரேட்டிங்?
இந்த வீக் எண்டு தியேட்டரில் ரிலீஸான தமிழ் படங்கள் பெற்ற ரேட்டிங் எவ்வளவு? குடும்பத்துடன் என்ன படம் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேஷன், ஜோர்ஜ் மரியான், அர்ச்சனா ஆகியோர் நடிப்பில் தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் 'லெனின் பாண்டியன்'. இளையராஜா இசையமைத்துள்ளார். மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டமும், ஒரு காவலரின் பொறுப்பையும் மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். வளவையான விமர்சனங்கள் பெற்று தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா இணையத்தளம் 5க்கு 3 ரேட்டிங் கொடுத்துள்ளது. இந்த வீக் எண்டு குடும்பத்துடன் சேர்ந்த பார்பதற்கேற்ப சமூக பொறுப்புள்ள படமாகும்.
எச்.வினோத், சீனு ராமசாமி ஆகிய இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செழியன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'தி கிராண்ட் மாஸ்டர்'. அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தூய்மைப்பணியாளராக பணிபுரியும் ஒரு தாய் தனது மகனை செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டராக்க போராடுகிறார். ஒரு தாயின் போராட்டம் பற்றிய இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இப்படத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா இணையத்தளம் 5க்கு 2 ரேட்டிங் கொடுத்துள்ளது.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மீசைய முறுக்கு 2'. அப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் உருவானது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வைப்புக்கு பஞ்சம் இல்லை என கூறப்படுகிறது. இளைஞர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வரும் இப்படத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா இணையத்தளம் 5க்கு 3 என்ற ரேட்டிங் கொடுத்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'டோரதி'. ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ், முத்துக்குமார், ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரு நண்பர்களுடன் நட்பு, குடும்ப கதை, ஊர் பிரச்னை, சண்டை, காதல் ஆகியவற்றை கூறும் கதை. கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் இப்படத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா இணையத்தளம் 5க்கு 4 ரேட்டிங் கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications