மக்களை கவர்ந்த லெஜண்ட் சரவணனின் லீடர்.. 3 நாளில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்த 'லீடர்' திரைப்படம் கடந்த 3 நாட்களில் செய்துள்ள வசூல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
லெஜண்ட்: தொழிலதிபரான லெஜண்ட் அருள் சரவணன், 2022ல் வெளிவந்த 'லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவான அப்படம், தியேட்டரில் ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்களை பெற்ற அப்படத்தை தொடர்ந்து அருள் சரவணன் நடிப்பில் இரண்டாவது திரைப்படம் வெளியானது.
ஹிட் இயக்குநருடன் கூட்டணி: எதிர்நீச்சல், காக்கி சட்டை, பட்டாசு, கொடி, கருடன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய துறை செந்தில்குமாருடன் கூட்டணி வைத்தார் லெஜண்ட் சரவணன். அவர் இயக்கத்தில் லீடர் திரைப்படம் பிரமாண்டமாக உருவானது.
படக்குழு: ஹீரோவாக லெஜண்ட் சரவணன் நடிக்க ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், ஜோர்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கதை சுருக்கம்? தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டு கேங்ஸ்டர்கள் உள்ளனர். அவர்கள் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை கடத்துவதில் வல்லவர்கள். அவர்களை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக ஆண்ட்ரியா உள்ளார். இருப்பினும் போலீஸ் அதிகாரிகளாலும் தடுக்க முடியவில்லை.
அதே துறைமுகத்தில் லெஜண்ட் சரவணன் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். அவர் யார்? அவருக்கும் கடத்தல்காரருக்கும் என்ன சம்மந்தம்? அவருடன் இருக்கும் குழந்தை யார்? என்பதே இப்படத்தின் மீதி கதை.
முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பக்காவான கமர்ஷியல் திரைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. விறுவிறுப்பான இந்த கதைக்களம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
வசூல்? கடந்த 3ம் தேதி தியேட்டரில் ரிலீசான இப்படம், 50-55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் 3.50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications