Home / Photos
PHOTOS: பல்லு பறக்க.. ரத்தம் தெறிக்க.. விஜய்யின் 'லியோ' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவனிச்சிங்களா!
By Chandru
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான இன்று வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் தீயாக வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'லியோ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.
2/8
Photo Credit: instagram
Share
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் விஜய், இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விஜயின் பிறந்தநாள் என்றாலே ஏதாவது ஒரு சர்பரைஸ் காத்திருக்கும். அந்தவகையில் விஜயின் 'லியோ' திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
3/8
Photo Credit: instagram
Share
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், மன்சூர் அலி கான், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல திரை பிரபலங்களின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'லியோ' . இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
4/8
Photo Credit: instagram
Share
லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என லியோ படக்குழு தெரிவித்திருந்தது. அந்தவகையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியானது.
5/8
Photo Credit: instagram
Share
இரவு முழிவதும் ஆந்தை போல் விழித்திருந்த விஜய் ரசிகர்கள் போஸ்டர் வெளியான சில நொடிகளில் லட்சக்கணக்கில் லைக்குகளை பறக்கவிட்டனர். வருடத்திற்கு ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து ரசிகர்களை வருடம் முழுவதும் அப்டேட்டுக்காக காத்திருக்க வைக்கும் விஜய் இம்முறை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
6/8
Photo Credit: instagram
Share
விஜய் படமாக லியோ இருந்தாலும் லோகேஷ் இயக்கம் திரைப்படம் என்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கைதி, மாஸ்டர், விக்ரம் என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷின் அடுத்த படமாக 'லியோ' திரைப்படம் ரசிகர்களை மிக பெரிய எதிர்பார்ப்பிற்குள் தள்ளியுள்ளது.
7/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் போஸ்டரில் இருக்கும் சில விஷயங்களை நோட் செய்திர்களா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.. அப்படி அந்த போஸ்டரில் நோட் செய்ய என்ன இருக்க என்பதை பார்ப்போம்.. லியோ என்ற பெயர் சிங்கத்தை குறிக்கும் ஆனால் இந்த போஸ்டரில் சிங்கத்திற்கு பதிலாக கழுத்தை புலி உருவம் இடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் காட்டில் சிங்கத்திற்கு மிக பெரிய எதிரியே இந்த கழுத்தை புலிகள் தானம். சிங்கம் விஜய்யாகவும், எதிரிகள் கழுத்தை புலிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக லியோ போஸ்டர் தெரிவிக்கின்றது.
8/8
Photo Credit: instagram
Share
மேலும் இந்த போஸ்டரில் விஜய் சுத்தியலை சுழற்ற எதிரிகளின் ரெத்தம் தெறிக்க, பற்கள் பறக்க என்று செம அதிரடியாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சமீபகாலமாக விஜய்யின் சில படங்கள் வசூலில் சாதனை படைத்தாலும் விமர்சனம் ரீதியாக சோதனையாகவே அமைந்திருந்தது, அந்தவகையில் லியோ திரைப்படமாவது விஜய்க்கு கைக்கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..


Click it and Unblock the Notifications