Home / Photos
இந்த காரணங்கள் தெரிஞ்ச இந்த எண்ணெய்யை தவிர்க்க மாட்டிங்க! இத்தனை நன்மைகளா..
By Divya Bala
நமது உடலின் ஆரோக்கியம் என்பதை முன்னோர்கள் கருத்தில் கொண்டுதான் பலவித உணவுகளை நமக்கே தெரியாமல் சேர்த்துள்ளார்கள். அப்படி சேர்க்கப்பட்ட இந்த நல்லெண்ணெயில் என்ன நன்மைகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.
1/7
Share
நல்லெண்ணெய் என்றாலே இந்திய கலாச்சாரத்தில் பண்டிகை நாட்களில் தலைக்கு தேய்த்து குளிக்க உபயோகப்படுத்துவது நியாபகத்துக்கு வரலாம். மேலும் நாம் உண்ணும் உணவில் பல வகைகளில் நல்லெண்ணெய் கொண்டு சமைக்கிறோம்.
2/7
Share
அம்மாக்கள் செய்யும் வத்த குழம்பு, புளிக்குழம்பு என நல்லெண்ணெய் மிதக்க சாப்பிடுவோம். பலரும் தோசையில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவார்கள். அப்படி நீங்கள் சாப்பிடுபவராக இருந்தால் உங்களுக்கே தெரியாமல் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
3/7
Share
நல்லெண்ணெய் எள் என்று சொல்லக்கூடிய விதைகளில் இருந்து எடுக்கப்படுவதாகும். இதில் குறிப்பாக வைட்டமின் ஈ மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நமது செல்களை பாதுகாப்பாக வைத்துள்ளன. இவற்றில் இருக்கும் இரும்புச்சத்துக்கள் எலும்புகளை வலுவாக வைத்துள்ளன.
4/7
Share
இதயத்தில் சேரும் கேட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கின்றன. இவற்றில் இருக்கும் நல்ல கொழுப்புகளால் இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறைய வாய்ப்பு உள்ளன. மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
5/7
Share
சமையலில் அடிக்கடி நல்லெண்ணெய் சேர்ப்பதால் அழற்சி உள்ளவர்களுக்கு அது குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இவை மலச்சிக்கலை போக்க வலி வகுக்கின்றன. குடலில் நல்ல பாக்ட்ரியாக்களை வளர்க்க உதவியை உள்ளன.
6/7
Share
நல்லெண்ணெயில் கால்சியம் அதிகளவில் உள்ளதால் எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. இதனால் தான் எள்ளுருண்டைகள் அதிகமாக சாப்பிடுகிறார்கள். மேலும் நல்லெண்ணெய் முடி மற்றும் சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவியாக உள்ளன.
7/7
Share
நல்லெண்ணெயில் இருக்கும் அதிகப்படியான மக்னீசியம் நீரிழிவு உள்ளவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளன. இவை இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்தால் நமது உடலில் நீரிழிவு வருவதை தடுக்கின்றன.


Click it and Unblock the Notifications