மறக்க முடியாத பணமதிப்பிழப்பு.. பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள்.. இந்தியாவை போல் பணத்தை மாற்றிய நாடுகளை பற்றி தெரியுமா?
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிடாமுயது. காரணம், அதன் தாக்கம் இன்றும் பலருக்கு வடுவாக மாறாமல் இருந்து வருகிறது. மத்திய அரசால் கடந்த 2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த நடவடிக்கையால் சாமானிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். கருப்பு பணத்தை வெளிகொண்டுவரவேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டபின்னர். சொந்த பணத்தை எடுக்க ஒவ்வொரு வங்கியாக ஓட வேண்டியிருந்தது. அன்றாட செலவுக்கு பணமில்லாமல் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் எடுக்க கடும் வெயிலில் கால்கடுக்க வரிசையில் காத்திருந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவை போல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இறங்கிய நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மியான்மர்: இந்தியாவுக்கு முன்னரே மியான்மரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு மியான்மர் அரசு திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையாண்டதால் மியான்மர் மக்கள் கடும் நிதிநெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் அரசிக்கு பெரிய போராட்டங்கள், வன்முறைகள் நடத்தப்பட்டன.
வடகொரியா: 2010ம் ஆண்டு வடகொரியா அதிபர் கிம் ஜாங் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். கருப்பு பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்: 2016ம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டுவந்ததை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வந்தது. பணத்தின் வடிவத்தை மாற்றியமைக்க இந்த நடவடிக்கை கொண்டுவரப்பதாக கூறுகின்றனர்.
கானா: 1982ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கானா, கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்தது. ஆனால் இந்த நடவடிக்கை அந்நாட்டின் பொருளாதராய் பின்னோக்கி தான் கொண்டுசென்றது.
நைஜீரியா: 1984ம் ஆண்டு நைஜீரியா அரசு கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு கொண்டு வந்தது மக்களிடையே இருந்து பணத்தை மீட்டது. இந்த நடவடிக்கை நைஜீரியா பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications