Home / Photos
PHOTOS : உக்ரைன் முதல் ட்விட்டர் வரை.. 2022 இன் முக்கிய உலக நிகழ்வுகள்..!
By Chandru
2022 ஆம் ஆண்டு உலகளவில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. உலகை உலுக்கிய உக்ரைன் போர், இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல நிகழ்வுகள் நிகழந்தன. அந்தவகையில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் என்னவென்று பார்ப்போம் :
1/15
Share
2022 ஆம் ஆண்டு உலகளவில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. உலகை உலுக்கிய உக்ரைன் போர், இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல நிகழ்வுகள் நிகழந்தன. அந்தவகையில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் என்னவென்று பார்ப்போம் :
2/15
Share
உக்ரைன் போர் : கொரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட்டு உலகம் மீண்டும் புத்துயிர் பெற்ற நிலையில் பிப்ரவரி மாதம் உலகை உலுக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது. ரஷ்யா அதிபர் புதின் உக்ரைன் நாட்டின் மீது ஆயுத தாக்குதல் நடத்த உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ அமைப்புகள் துணை நிற்க இரு நாட்டிற்கும் இடையே 300 நாட்கள் போர் நடைபெற்றது. தொடர்ந்து பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது வரை இந்த போர் முடிவில்லாமல் இருந்து வருகிறது.
3/15
Share
இம்ரான் கான் : ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்தார்.
4/15
Share
இலங்கை பொருளாதார நெருக்கடி : உலகில் இதுவரை எந்த நாடும் சந்தித்திடாத மிக பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை இந்த ஆண்டு சந்தித்தது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டி மார்ச் மாதம் இறுதியில் மக்களின் போராட்டம் தொடங்கியது. பின் மே மாதத்தில் மிக பெரிய புரட்சியாக வெடித்து இலங்கையின் நாடாளுமன்றத்தை சூறையாடினர். இலங்கையில் இருந்து தப்பித்து சென்ற மகிந்த ராஜபக்சேவை தொடர்ந்து விக்கிரமசிங்கே இலங்கை அதிபராக பதவியேற்றார்.
5/15
Share
ஷின்சோ அபே படுகொலை : ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, ஜூலை 8ஆம் தேதி அரசியல் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜப்பான் போலீசிடம் பிடிபட்டார். போலீஸ் விசாரணையில், ஷின்சோ அபே மதக் குழுவை ஊக்குவித்ததால் சுட்டு கொன்றதாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தெரிவித்துள்ளார்.
6/15
Share
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு : இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக ஜூலை 25 அன்று பதவியேற்றார். பிரதிபா பாட்டீலுக்குப் பிறகு ஜனாதிபதி பதவியேற்கும் இரண்டாவது பெண்மணி இவர் ஆவார்.
7/15
Share
வெப்ப அலை : ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியது. ஐரோப்பா முழுவதும் அதீத வெப்ப அலையின் தாக்கத்தால் 20,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். உலகளவில் ஏற்பட்ட மிக பெரிய காலநிலை மாற்றம் இதுவாகும்.
8/15
Share
ராணி எலிசபெத் இறப்பு : இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். ராணி எலிசபெத் தனது 96 ஆம் வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். ராணியாக அதிக காலம் ஆட்சிசெய்த பெருமை இவரையே சேரும். எலிசபெத் ராணியின் மறைவுக்கு பிறகு அவரது 74 வயது மகன் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார்.
9/15
Share
மூன்றாவது முறையாக பதவியேற்கும் ஜி ஜின்பிங் : சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். மக்கள் குடியரசை நிறுவிய மாவோ சேதுங்கிற்குப் பிறகு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்கும் இரண்டாவது தலைவர் ஜி ஜின்பிங் ஆவார்.


Click it and Unblock the Notifications