பிப்ரவரி மாதத்தில் வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள்.. என்னென்ன? உங்களுக்கு பிடிச்ச படம் எது?
கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்திய ஹிட் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான காமெடி ட்ராமா திரைப்படம் 'பூக்கி'. விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளிவந்த இப்படம், 1.40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தியேட்டர்கள் குறைவாக கிடைத்ததால் படம் வசூலில் சொதப்பியது.
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமன்று தியேட்டரில் ரிலீசான திரைப்படம் 'சீதா பயணம்'. நிரஞ்சன் நாயகனாகவும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் சுமார் 1.80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியானது.
ராஜா முருகன் இயக்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி சசிகுமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மை லார்ட்'. எதிர்பார்ப்புடன் ரிலீசாகி நல்ல விமர்சனம் பெற்ற இப்படம் 2.90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
பிப்ரவரி 27ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் 'தாய் கிழவி'. ராதிகா நடிப்பில் வெளிவந்த இப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அதன்படி இப்படம் இதுவரை 20 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த திரைப்படம் 'அபிஷன் ஜீவிந்த்'. பிப்ரவரி 6ம் தேதி தியேட்டரில் ரிலீசான இப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்படி இப்படம் உலகளவில் சுமார் 38 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications