Home / Photos
எரிபொருள் தட்டுப்பாட்டால் திண்டாடும் நாடுகள்.. தற்போதைய நிலையை என்ன தெரியுமா?
By Chandru
போர் பதற்றம் காரணமாக ஈரான் அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மஸ் நீர்வழிப்பாதையை தற்காலிகமாக மூடியுள்ளது. பிற நாட்டு கப்பல்கள் உள்ளே வராதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாகியுள்ளது. அதேபோல் சீனா மற்றும் இந்திய கப்பலுக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளது. இந்த நீர்வழி பாதையில் தான் பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாதை மூடப்பட்டிருப்பதால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வேலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் திண்டாடும் நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: Gemini.AI
Share
இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் புதன்கிழமை பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2/6
Photo Credit: Gemini.AI
Share
மியான்மர் நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் தனியார் வாகனங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
3/6
Photo Credit: Gemini.AI
Share
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் அரசு ஊழியர்கள் ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
4/6
Photo Credit: Gemini.AI
Share
தாய்லாந்தில் ஏ.சி யை குறைவாக பயன்படுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5/6
Photo Credit: Gemini.AI
Share
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் வங்கதேசத்தில் பள்ளிகளுக்கு நீண்டவிடுமுறை, நாடு முழிவதும் மின்வெட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
6/6
Photo Credit: Gemini.AI
Share
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் வியட்நாமில் அந்நாட்டு மக்கள் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்துமாறு அரசு கோரிக்கை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications