இந்தியாவிடம் அதிக கடன் வாங்கி தத்தளிக்கும் நாடுகள்.. நம்பர் ஒன் நாடு எது? லிஸ்ட்!
இந்தியாவிடம் அதிக கடன் வாங்கிய நாடுகள் என்னென்ன? வாங்கிய தொகை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் வியட்நாம் உள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதிவேக ரோந்து படகுகள் வாங்குவதற்காக சுமார் 4,175 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் மாலத்தீவு உள்ளது. பாதுகாப்பிற்காக சுமார் 5010 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் நேபாளம் உள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் சாலை மேம்பாட்டிற்காக சுமார் 5845 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் மொரீஷியஸ் தீவு நாடு உள்ளது. மெட்ரோ மற்றும் நாடு மக்களின் குடியிருப்பு தேவைகளுக்காக சுமார் 8,350 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. மொசாம்பிக், சூடான் உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா 83,500 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் இலங்கை உள்ளது. பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருள், உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு சுமார் 33,400 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இறுதியாக, இந்தியாவிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் வங்கதேசம் உள்ளது. ரயில்வே, பாலங்கள் கட்டுமானம் மற்றும் மின் உற்பத்திக்கு சுமார் 61,456 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications